இந்தியா, பிப்ரவரி 3 -- பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பிரபலங்கள் பலரும் தற்போது தமிழ் சினிமாவிலும் ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சீரியல் நடிகையான ஆயிஷா தற்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இரும்புத்திரை, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன், ஆயிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் மூலம் இவர் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

காதலர்கள் பிரிந்த நிலையில் இருவரும் வேறொருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். எதிர்பாராத விதமாக மீண்டும் அவர்களுக்கு இடையே தொடர்பு ஏற்பட, சென்னையில் உள்ள ஒரு பகுதியில் வைத்து சந்திக்க திட்டமிடுகிறார்கள்.

இந்த சந்திப்பின்போது இருவரும் அறை ஒன்றினுள் ஒன்றாக மாட்டிக்கொள்கிறார்கள். அந்த அறையின் கதவு திறக்கப்பட்டால் வெளியே இருவ...