இந்தியா, பிப்ரவரி 4 -- Bigg Boss Arun& Archana: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கு தனியே அறிமுகம் தேவையில்லை. இந்த சீசன் ஆட்டமும் புதுச, ஆளும் புதுசு என்ற ஸ்லோகனுக்கு ஏற்றார்போல எண்ணற்ற திருப்பங்களை கொண்டிருந்தது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளரான அருண், பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனாவை காதலிப்பதாக ஆரம்பத்தில் இருந்தே தகவல்கள் பரவி வந்தன. அவற்றிற்கு எல்லாம் மறுப்பு தெரிவித்து, அருணுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார் அர்ச்சனா.

பின், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அவர், அருணுடனான காதலை உலகிற்கு காட்டினார். அங்கு, அவருக்கு தன் ஆதரவை தெரிவித்தார். பின், பிக்பாஸில் இருந்து அருண் வெளியேறிய பின்னும் அவரை வரவேற்று கொண்டாடினார். இந்நிலையில், இவர்கள் இருவரும் முதல் முறையாக சேர்ந்து ரெட் நூல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தனர்....