இந்தியா, ஜனவரி 28 -- Bigg Boss Arun: தமிழில் கடந்த அக்டோபர் 6ம் தேதி பிக்பாஸ் சீசன் 8 மிகவும் கோலாகலமாக தொடங்கியது. தமிழில் முதல்முறையாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என பிக்பாஸ் வீட்டிற்குள் 16 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்தார் அருண் பிரசாத்.

சேலத்தை சேர்ந்த இவர், சினிமா வாய்ப்புக்காக பல ஷார்ட் பிலீம்களில் நடித்து புகழ்பெற்றார். பின் மேயாத மான் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்ததால், அவர் சீரியலில் நடிக்க தயாரானார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் அவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த சீரியலின் வெற்றியால் 2ம் பாகத்தையும் விஜய் டிவி வெளியிட்டது., ஆனால், இது அவ்வளவாக மக்களிடம் ஆதரவு பெறாத நிலையில் விரைவாகவே சீரியலும் முடிக்கப்பட்டது...