இந்தியா, பிப்ரவரி 3 -- Bigg Boss Archana: அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அருண், அங்கு நடிகையும் முன்னாள் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான அர்ச்சனாவை காதலிப்பதாக கூறினார். தொடர்ந்து அவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள்ளும் கொண்டு வந்து ரிலேஷன்ஷிப்பை உறுதிபடுத்தினார்.

தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த அவர்,அர்ச்சனாவுடம் இணைந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் அவர் தனது குடும்பம் மற்றும் அர்ச்சனாவுடன் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டியளித்து இருக்கிறார். அந்தப்பேட்டியில் அருணின் அப்பா அர்ச்சனா - அருண் காதல் குறித்து பேசி இருக்கிறார்.

அவர் பேசும் போது, 'இந்த நிமிடம் வரை அருண் எங்களிடம் வந்து நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னதே கிடையாது. அருணும், அர்ச்சனாவும் ஒருமுறை கூட எங்...