இந்தியா, ஜனவரி 26 -- Benefits of Sun salutation : அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகளும், நிபுணர்களும் கூறுகின்றனர். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். தினமும் காலையில் 3 முறை சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். இதனால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் நன்மைகள் கிடைக்கிறது. இது உங்கள் உடலின் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது. உடலுக்கு வலு கொடுக்கிறது. உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆற்றலையும் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் உடலில் உள்ள தசைகளை நன்றாக விரிவடையச் செய்து உடலின் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தை அதிகரிக்கிறது. தசைகளில் இறுக்கத்தைப் போக்குகிறது. இது உங்கள் உடலுக...