இந்தியா, பிப்ரவரி 2 -- உடலின் முழுமையான ஆரோக்கியத்திற்கு நமக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன. இத்தகைய ஊட்டச்சத்து குறைப்பாடு வரும் போது மருத்துவர்கள் ஏதேனும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள பரிந்துரைப்பார்கள். மேலும் பல பழங்களையும், காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளவும் செய்வார்கள். எனவே உணவின் வழியாக நமக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து ஒரு இயற்கையான மூலமாகும். இது நம் உடலில் எந்தவித பக்கவிளைவுகளையும் தருவதில்லை. இந்த நிலையில் உடலின் ஆரோக்கியத்தை பாராமரிப்பதில் உலர் திராட்சையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் கிடைக்க கூடிய பலன்களை இங்கு காணலாம்.

ஊட்டச்சத்து பண்புகள் என்று வரும்போது திராட்சையும் முன்னணியில் உள்ளது. தோல் பராமரிப்பு முதல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை தின...