இந்தியா, ஏப்ரல் 19 -- நேந்திரன் பழம் கேரளாவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பழங்களுள் முக்கியமானது. தமிழகத்தில் இந்த பழத்தை அதிகளவில் பயன்படுத்துவதில்லை. நேந்திரன் வாழைக்காயில் சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகிறது.

அது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக உள்ளது. நேந்திரம் பழத்தில் பழ பஜ்ஜி, பழம்பெரி என கேரள மக்கள் பல்வேறு ஸ்னாக்ஸ்களை தயாரித்து சாப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் அந்தப்பழத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்.

நேதிரன் பழத்தில் உள்ள நற்குணங்கள் தெரிந்தால், அந்தப் பழத்தை சாப்பிடுவதை நீங்களும் விடமாட்டீர்கள். நேந்திரன் பழத்தின் நன்மைகள் என்னவென்றுதான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நேந்திரன் பழத்தில் 112 கலோரிகள் உள்ளது. கொழுப்பு சுத்தமாக இல்லை. புரதச்சத்து ஒரு கிராம், கார்போஹைட்ரேட் 29 கிராம், நார்ச்சத்துக்கள் 3 கிராம் உள்ளது. தினசரி அளவில் வ...