இந்தியா, ஜனவரி 28 -- முலாம் பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு 10 நன்மைகள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. முலாம் பழம் குறைவான விலையில் கிடைக்கக் கூடிய பழமாகும். இது சுவையானது மற்றும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்தது. அதிகப்படியான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இந்த பழத்தை நீங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள் என்னவென்று பாருங்கள்.

முலாம் பழத்தில் அதிகளவில் நீர்ச்சத்துக்கள் உள்ளது. இதில் கிட்டத்தட்ட 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதனால் முலாம் பழம் உங்களை நாள் முழுவதும் நீர்ச்சத்துக்களுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது உங்களுக்கு குளிர் காலங்களில் மிகவும் நல்லது. அப்போதுதான் உடல் நீர்ச்சத்தை இழக்கும். இந்தப்பழம் மற்றும் இதன் சாறுகள் மிகக்குறைந்த விலையில் எளிதில் கிடைக்கக்கூடியவை என்பதால் இ...