இந்தியா, ஏப்ரல் 23 -- பொதுவாக பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதை விறகு அடுப்பில் சுட்டு சாப்பிடுவார்கள். இதை கேஸ் ஸ்டவில் சுடும்போது, இரும்பு கடாயில் 6 பல் பூண்டு எடுத்து தோளுடன், வறுக்கவேண்டும். கேஸ் ஸ்டவில் நேரடியாக பூண்டை வறுத்தால் நல்லது கிடையாது.

எனவே இரும்பு அல்லது சில்வர் கடாய் அல்லது தோசைக்கல்லில் வறுத்துக்கொள்ள வேண்டும். நான்ஸ்டிக் தவாவை மட்டும் பயன்படுத்தக்கூடாது. பூண்டு உள்ளே வெந்து வரவேண்டும். அதுபோல் வறுத்துக்கொள்ளவேண்டும். எண்ணெய், நெய் எதுவும் சேர்க்கத்தேவையில்லை.

பூண்டை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஆனால் காரம் அதிகம் இருக்கும். வாயில் துர்நாற்றம் வீசும். இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். சுட்ட பூண்டை ஆறவைத்து சாப்பிடவேண்டும். அதற்குப்பின்னர் மிதமான சூட்டில் தண்ணீர் பருகவேண்டும்.

இரவு உறங்கச் செல்வதற்கு அரை...