இந்தியா, மார்ச் 11 -- எப்சம் உப்பு, சரும பராமரிப்பு, அழகுக்கு பயன்கொடுப்பதுடன் பல்வேறு பலன்களைக் கொடுக்கிறது. மனஅழுத்தம் சதை வலி போன்ற உடல் உபாதைகளுக்கும் நன்மை கொடுக்கிறது. இதை வாங்குவதும் எளிது, சரியான பயன்படுத்தினால் உடலுக்கு அபாயமற்றது.

எப்சம் சால்ட், எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் சல்பேட், இது மெக்னீசியம், சல்பஃர், ஆக்ஸிஜன் கலந்தது. இது வழக்கமான உப்பு போலவே தோற்றமளிக்கும். இதை கலந்து குளிக்க பயன்படுத்தாலம். இதனால் இது குளியல் உப்பு என்று அழைக்கப்படுகிறது. இது உப்பை போல் இருந்தாலும் கரிக்காது கசக்கும் தன்மை கொண்டது.

இதை சிறிதளவு தண்ணீரில் கலந்து பருகலாம். இதன் கசப்பு சுவையால் இதை சமையலுக்கு பயன்படுத்த முடியாது. இது மலச்சிக்கல் உள்ளிட்ட பல உடல் உபாதைகளை போக்க உதவுகிறது. இப்போதும் பெரும்பாலானோருக்கு போதிய மெக்னீசிய சத்து கிடைப்பதில்ல...