இந்தியா, ஏப்ரல் 23 -- இஞ்சி வகை குடும்பத்தை சேர்ந்தது ஏலக்காய். இது நல்ல தனித்தன்மையான மனம் நிறைந்தது. இது இனிப்பு மற்றும் காரம் என இரு உணவு வகைகளிலும் சேர்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஏலக்காயில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள நன்மைகள் என்ன தெரியுமா?

ஏலக்காய் செரிமானத்துக்கு தேவையான எண்சைம்களை சுரக்கிறது. இதனால் வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுவலி போன்ற பொதுவான வயிறு வலி பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

இயற்கையில் உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கி, வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஏலக்காயில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், வீக்கத்தை குறைப்பதுடன...