இந்தியா, பிப்ரவரி 10 -- பூசணிக்காய் - ஒரு கீத்து

தேங்காய் பால் - ஒரு கப்

சீரகம் - ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - ஒரு ஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

உளுந்து - கால் ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

தயிர் - கால் கப்

பூசணிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயை சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதில் நறுக்கிய பூசணிக்காய்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தையும் அரைத்து சேர்க்க வேண்டும். தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வெந்தவுடன், தயிர் கலந்து இறக்கிவிடவேண்டும். சூப்பரான சுவையில் பூசணிக்காய் பச்சடி தயார். இதில் பல்வேறு உணவுகளை சமைத்து ஒரு மண்டலம் தவறாமல் சாப்பி...