இந்தியா, மே 9 -- வாதுமை பழமானது இந்த கோடை காலத்தில் கிடைக்கும் பழமாக மட்டுமல்லாமல், உங்கள் உணவில் இணைத்து சாப்பிடும் சிறந்த பழமாகவும் உள்ளது. ஆரோக்கியம் நிறைந்த இந்த பழத்தில் அடர்த்தியான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக நிபுணர்கள் பலரும் கூறுகிறார்கள்.

கண்களின் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் ஏ, ஈ போன்ற கலவைகள் ஏராளமாக வாதுமை பழத்தில் உள்ளன. மாலக்கண் பாதிப்பை தடுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது வைட்டமின் ஏ. அதேபோல் வைட்டமின் ஈ சத்துகளில் உள்ள கொழுப்பில் கரையக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் கண்களுக்குள் நேரடியாக புகுந்து ரேடிக்கல் சேதம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

வாதுமை பழம் பீட்டா கரோடீன் சத்துக்களின் சிறந்த ஆதாரமாக திகழ்கிறது. வைட்டமின் ஏ சத்துகளின் முன்னோடியாகவும், ஆரஞ்சு நிறத்தை அளிக்கும் அளிக்கும் முக்கிய கரோட்டினாய்ட...