இந்தியா, பிப்ரவரி 14 -- உங்களுக்கு சுவையும், ஆரோக்கியமும் ஒருங்கே அமைந்த உணவுகள் வேண்டுமா? இந்த பீட்ரூட் ரெசிபிக்களை செய்தாலே உங்கள் நாவில் எச்சில் ஊறும். கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் சுவையைக் கூட விடமாட்டீர்கள். இவை உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல, இவை உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் கொக்கும்.

பீட்ரூட் ஸ்மூத்தி உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும் ஆரோக்கியமான பானமாகும். இது உங்களால் விரைவில் செய்யக்கூடிய ஒரு காலை உணவாகும். இது உடற்பயிற்சிக்குப் பின்னர் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. வேக வைத்த அல்லது பச்சையான பீட்ரூட்களை நீங்கள் வாழைப்பம், ஆப்பிள் மற்றும் பெரிகள் மற்றும் யோகர்ட் அல்லது பாதாம் பாலுமன் சேர்த்து மிக்ஸி ஜாரில் அடித்து எடுத்தால் போதும். சூப்பர் சுவையான பீட்ரூட் ஸ்முத்தி தயார். இதை நீங்கள் அப்படியே பருகல...