இந்தியா, பிப்ரவரி 6 -- Beetroot Poriyal : பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்தினாலும் கூட சிலருக்கு பீட்ரூட் என்றாலே பிடிப்பதில்லை. பீட்ரூட் பொதுவாக இனிப்பு சுவை உள்ளது என்பதால் சாப்பாட்டுடன் சாப்பிட சிலர் விரும்புவது இல்லை. ஆனால் நீங்கள் ஒரே ஒரு முறை இந்த மாதிரி காரசாரமாக பீட்ரூட் பொரியல் செய்து பாருங்கள். அதன் இனிப்பும் காரமும் கலந்த வித்தியாசமான சுவை உங்கள் வீட்டில் எல்லோரையும் கவரும்‌. வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி இதுபோல செய்து தர சொல்லி கேட்பார்கள்.

பீட்ரூட்டை குட்டி குட்டியாக நறுக்கிஎடுத்து கொள்ளலாம். இல்லையென்றால் பெரிய சைஸில் துருவியும் எடுத்து கொள்ளலாம்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சோம்பு, 10 வெங்காயம், 3 வத்தல் சேர்த்து நல்ல பேஸ்ட்டாக அர...