இந்தியா, பிப்ரவரி 21 -- நாம் வழக்கமாக சமையலில் சேர்க்கப்படும் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட் ஒரு வேர்த் தாவரமாகும். இதில் நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஹிமோகுளோபினை அதிகரிப்பதாகவும் நம்பப்படுகிறது. எனவே நமது உணவில் பீட்ரூட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பல உணவியல் நிபுணர்களும் பரிந்துரைப்பதை கேட்டிருப்போம். குறிப்பாக இது போன்ற சத்துள்ள காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் உடனடியாக மறுத்து விடுகிறார்கள்.

மதிய உணவுடன் பீட்ரூட் கொடுத்து விட்டால் அது அப்படியே திரும்பி வருகிறது. எனவே குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஒரு உணவாக கொடுத்தால் அதனை சாப்பிட்டு விடுவார்கள். உங்கள் குழந்தை பீட்ரூட்டை விரும்பி சாப்பிட அதில் கட்லெட் செய்து கொடுங்கள். இது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். மாலை நேரத்தில் சாப்பிட சிறந்த ஸ்நாக்ஸ் ஆக...