இந்தியா, பிப்ரவரி 7 -- முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் நரை உள்ளிட்ட தலைமுடி பிரச்னைகளுக்கு பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசா ஈசன் கூறிய தகவல்களை உங்களுக்கு கீழே தொகுத்து கொடுத்துள்ளோம். இவைகுறித்து அவர் கூறியதாவது,

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளுக்கு வெளிப்புற மருத்துவம் மட்டும் செய்து வந்தால் போதாது. உள் மருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடுக்காய் - 50 கிராம்

நெல்லிக்காய் - 50 கிராம்

இலவம் பிசின் - 50 கிராம்

கொட்டை கரந்தை - 50 கிராம்

அருகம்புல் - 50 கிராம்

ஆகியவற்றை எடுத்து நிழலில் உலர்த்தி ஒன்றாக சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த பொடியை தினமும் காலை, மாலை என இருவேளை, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு, தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி பருகி விடவேஷ்டும்.

கார்போ...