இந்தியா, பிப்ரவரி 10 -- நாம் வாழைப் பழங்களைச் சாப்பிட்ட பின்னர் அதன் தோலை குப்பையில் போடுவோம். ஆனால் அந்த தோலை வைத்து முகத்திற்கு பேஸ்ட் தயாரிக்க முடியும். இதனை உங்கள் முகத்தில் தடவும் போது சருமத்தில் பல வகையான நன்மைகளை கொடுக்கிறது. வாழைப் பழத்தோல்களில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இந்த வாழைப் பழத்தோல்களைப் பயன்படுத்தி 5 வகையான எளிய ஃபேஸ் பேக்குகள் செய்யலாம். அதனை எப்படி பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.

பழத்தோல் மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்கில் பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிக்கவும், பளபளப்பாகவும் இருக்க உதவும்.

தோலின் உட்புறத்தைச் சீவி, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேனைச் சேர்க்கவும...