இந்தியா, ஜனவரி 30 -- பிரபல பத்திரிகையாளரும், இயக்குநருமான ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து வரும் புதிய படம் மை லார்ட். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஃபஸ்ட் லுக் மட்டும் வெளியாகியிருக்கும் சூழலில் மை லார்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலரான ஆர்டிஐ செல்வம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், "மை லார்ட் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரில் கதையின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் சேர்ந்து புகைப்பிடிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பெண்களை அவமதிக்கும் விதமாக இருப்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகியிருக்கும் நிலையில், தடை கோரியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏ...