இந்தியா, பிப்ரவரி 13 -- தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குநர், படத்தொகுப்பாளர் என பன்முக கலைஞராக தனது தனித்துவ படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்தவர் பாலுமகேந்திரா. சினிமாவை முறையாக பயின்று சமரசம் இல்லாத சினிமாக்களை மக்களுக்கு கொடுத்த தமிழ் சினிமாவின் தலை சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக திகழ்கிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்த பாலுமகேந்திரா மக்கள் என்றென்றும் மறக்க முடியாத சினிமாக்களை கொடுத்துள்ளார்.

ஈழத்தில் மட்டகளப்பு அருகேயுள்ள அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலுமகேந்திரா. ஆறாம் வகுப்பு படிக்கும்போது இலங்கையில் ஒரு ஆங்கில சினிமா படப்பிடிப்பில் இயக்குநராக வேலை பார்த்துக் கொண்டிருந்த டேவிட் லீனின் ஆளுமையை பார்த்து, தானும் இயக்குநராக வேண்டும் ஆசைப்பட்டார் பாலுமகேந்திரா.

அந்த உந்துதலில்...