இந்தியா, பிப்ரவரி 15 -- Balaji Murugadoss: ஃபயர் திரைப்பட காட்சியை திரையரங்கில் பார்த்த பாலாஜி முருகதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பில் அவர் பேசும் போது, 'முதலில் கிரவுண்ட் கொடுத்தால் தானே ஆட முடியும்; கிரவுண்ட் கொடுக்காமல் உனக்கு ஆடத் தெரியாது என்று சொன்னால், அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த கேரக்டரை நான் தேர்வு செய்தது மட்டும் கிடையாது. இந்தக் கெரியரை நான் தேர்ந்தெடுத்ததும் இருமுனை கத்தி போன்றது தான்.

இது நம்முடைய கட்டுப்பாட்டில் எப்போதுமே இருக்காது. இந்தத் துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; அதற்குச் சரி சமமாக கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதனால், எங்களை பற்றி நீங்கள் எழுதும் பொழுது, பேசும் பொழுது, தயவு செய்து எங்களது தன்னம்பிக்கையும், அல்லது சுயமரியாதையும் பாதிக்கப்படாத வகையில் எழுத, பேச வேண்டும்.

தய...