இந்தியா, பிப்ரவரி 10 -- ' பொறந்தவீடா புகுந்த வீடா ' திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து இயக்குநர் எஸ்.வி. சேகர் ரெட் நூல் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது , ' அப்போது நீண்ட நாட்களாக பாக்யராஜ் சாருக்கு என்னுடன் பணியாற்ற வேண்டும் என்ற நினைப்பு இருந்தது. இந்த நிலையில் 'பொறந்த வீடா, புகுந்த வீடா' திரைப்படத்தின் கதையை பாக்யராஜ் சாரிடம் கூறினேன். அந்த படத்தில் கதாநாயகியாக பானுப்பிரியாவை கமிட் செய்யலாம் என்று பேசினோம்.

படத்தின் க்ளைமேக்சில் பானுப்பிரியா கேரக்டர் அதிகமாக ஆதிக்கம் செலுத்துவது போன்று கதையமைப்பு இருக்கும். ஆனால், அதில் பாக்யராஜ் சாருக்கு உடன்பாடில்லை. இந்த நிலையில் அவர் கதையில் சிறிது மாற்றம் செய்து, அவருக்கு முக்கியத்துவம் இருக்கும்படி எழுத சொன்னார்.

ஆனால், நான் அதற்கு மறுப்பு தெரிவித்...