இந்தியா, ஜனவரி 28 -- சிசேரியனுக்குப் பின்னர் ஏற்படும் இடுப்பு மற்றும் முதுகு வலியால் அவதிப்படும் பெண்கள் என்ன செய்யவேண்டும் என்று சித்த மருத்துவர் உஷா நந்தினி கூறுவதைக் கேளுங்கள். அவர் புதுயுகம் டிவிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு இடுப்பு வலி என்பது மிகவும் கடுமையானதாக இருக்கும். மேலும் குழந்தை பிறந்த பின்னர், அதிலும் சிசேரியனுக்காக போடப்படும் ஊசிகளாலும் இது ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், உடல் எடை அதிகரிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இவற்றாலெல்லாம் தொடர்ந்து இடுப்பு வலி உள்ளது.

மேலும், பெண்களுக்கு இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் என்ற குடல் அழற்சி நோயும், ஹார்மோன்களின் சமமின்மையால் ஏற்படுகிறது. இந்த நோய் இருப்பவர்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று நாம் கட்டாயம் சத்தான ஆகாரங்க...