இந்தியா, பிப்ரவரி 10 -- மகாபாரதத்தில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு பெயர்களை தேர்ந்தெடுக்கலாம். மகாபாரதத்தில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் உள்ளது. அதில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு அழகான பெயர்களை தேர்ந்தெடுக்க முடியும். மகாபாரதத்தில் உள்ள பெயர்களுக்க ஆழமான அர்த்தங்கள் உள்ளது. அவை துணிச்சல், வீரம், அறிவு, ஞானம், தெய்வீகம் மற்றும் பலம் என எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பெயர்கள் இதிகாசத்தில் வேரூன்றியுள்ளது. எல்லா காலத்துக்கும் ஏற்ற அறம் மற்றும் ஹீரோயிச தன்மைகளைக் கொண்டது. உங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட அடையாளத்துக்கு அர்த்தமுள்ள இந்தப்பெயர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளங்கள்.

அசிட்டா என்பது ஒரு ஞான குருவின் பெயர். இவர் வியாசரின் வழி வந்தவர். இவர் சூதாட்டத்தை வலுவாக எதிர்த்தார். ஒழுக்கத்தை கற்பித்தால், சரியான விஷயங்களை மக்களிடம் புகுத்தின...