இந்தியா, பிப்ரவரி 4 -- பூக்கள் என்றால், அழகு மற்றும் நேர்மறை எண்ணம் என்று பொருள். உங்கள் குழந்தைகளுக்கு அழகிய பூக்களின் பெயர்களை நீங்கள் சூட்டும்போது அது அவர்களுக்கு தனி அடையாளத்தைக் கொடுக்கும். இந்தப்பெயர்கள் உங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு ஏற்ற அழகிய பெயர்கள் மட்டுமல்ல, இவை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற அர்த்தமுள்ள பெயர்களும் ஆகும்.

ஜீஹி என்றால் மல்லிகை என்பதன் அர்த்தமாகும். இதற்கு மல்லிகையின் மணம், தூய்மை, நளினம், எழில், அழகு, தெய்வீகத்தன்மை என எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்டது. மல்லிகை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் மதுரையில் மிகவும் புகழ்பெற்ற மலராகும். இந்த மலர் இறைவன் கிருஷ்ணனுடன் தொடர்புடையது. இதை பல்வேறு மதச்சடங்குகளிலும் மக்கள் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஷால்மலி என்றால் இலவம் பஞ்சு மரம் என்று பொருள். இதில் பிரகாசமான சிவப்பு...