இந்தியா, மார்ச் 26 -- Babumoshai Ekadashi: உலகம் முழுவதும் தங்களது இறைவனை நினைத்து அனைத்து விதமான மக்கல்களும் விரதம் இருப்பது மிகவும் முக்கியமான ஐதீக பழக்க வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் வெவ்வேறு கடவுள்களை மனிதர்கள் வழிபாடு செய்து வந்தாலும் விரத முறை என்பது மிகவும் அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் விரதங்களிலேயே மிகவும் சிறந்த விரதமாக கருதப்படுவது ஏகாதசி விரதமாகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுஷ்டிக்கும் விரதம் தான் இந்த ஏகாதசி விரதம் என கூறப்படுகிறது. பொதுவாக இந்த ஏகாதசி விரதம் மகாவிஷ்ணுவை நினைத்து அனுஷ்டிக்கும் விரோதமாக கருதப்படுகிறது.

இந்த ஏகாதசி விரதம் மேற்கொண்டால் பல்வேறு விதமான நற்பலன்கள் கிடைக்கும் என்பது இன்றுவரை பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் வளர்பிறை ஏகாதசி மற்றும் தேய்பிறை ஏகாத...