இந்தியா, ஏப்ரல் 6 -- தமிழ் சினிமாவில், சுந்தர் சி - குஷ்பு ஜோடிக்கு அறிமுகமே தேவையில்லை. 25 ஆண்டு திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக கடந்த இந்த ஜோடிக்கு, அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் இருக்கிறார்கள்.

இதில் அவந்திகா லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்று, தற்போது நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவரிடம் அண்மையில் ஹிந்துஸ்தான் ஆங்கிலம் இணையதளம் பிரத்யேகமாக பேட்டி கண்டது.

மேலும் படிக்க | Mookuthi Amman 2 Movie: இதெல்லாம் திருஷ்டி சுத்தி போட்ட மாதிரி.. மூக்குத்தி அம்மன் 2 பிரச்னை பற்றி பேசிய குஷ்பு

அந்த பேட்டியில் அவந்திகா தன்னுடைய உயரம் எப்படி தன்னுடைய சினிமா கெரியருக்கு தடைக்கல்லாக இருந்தது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, ' எந்த மொழியிலும் நடிக்க நான் தற்போது தயாராக இருக்கிறேன். நல்ல கதைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறே...