இந்தியா, பிப்ரவரி 14 -- Atharvaa: இதயம் முரளி என்னும் திரைப்படத்தின் முதல் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு, சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் நடிகர் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், ஆர்.ஜே.ஏஞ்சலினா, ரக்‌ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக, இசையமைப்பாளர் எஸ். தமனும், யூடியூபர் டேவிட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு தனியார் கல்லூரியில் நடந்த இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் அதர்வா, ''உங்க எல்லார்கிட்டேயும் ஒரு கேள்வி கேட்கணும். எத்தனை பேர் லவ் பண்றீங்களோ கை தூக்குங்க. கம்மியாக இருக்கே. இங்கே எத்தனை பேர் ஒன் சைடு லவ் பண்றீங்க. மெஜாரிட்டி அதுதான் அதிகமா இருக்கு போலயே.

உண்மையிலேயே சொல்லணும் என்றால் டபுள் சைடு லவ்வைவிட ஒன் சைடு லவ்ல இருக்கிற சந்தோஷம் ஆகட்டும்; துக்கம் ஆகட்டும்;...