இந்தியா, பிப்ரவரி 20 -- Astro Tips : உடலை வருத்தி நேர்த்திக்கடன் மேற்கொள்வது அவசியமா என்பது குறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தனது ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார். இது குறித்து கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி வெளியான காணொளியில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.

அக்னி சட்டி எடுப்பது, அழகு குத்திக் கொள்வது, பறவை காவடி எடுப்பது போன்ற கஷ்டமான உடலை வருத்திக்கொண்டு செய்யக்கூடிய வழிபாடுகள் என்பது அவசியமா அதை ஏன் செய்ய வேண்டும் என்று பல பலர் கேட்கின்றனர். எப்போதும் கஷ்டப்பட்டு கும்பிடு என்று இறைவன் சொல்கிறாரா என்றால் கிடையாது. இறைவன் மிகவும் எளிமையானவர். அந்த எளிமையான இறைவனை நாம் எளிமையாகவே கும்பிடலாம். ஆனால் ஒரு சிலர் இதுபோன்ற கடுமையான விரதத்தை மேற்கொள்கிறார்களே எதற்காக என்று கேள்வி வருகிறத...