இந்தியா, பிப்ரவரி 8 -- விரதம் இருக்கும் போது நாம் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் என்ன என்று நீங்கள் யோசித்தது உண்டா.. இது குறித்து ஆத்ம ஞான மையம் you tube சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி கடந்த 2024 டிசம்பர் 16ம் தேதி வெளியிட்டுள்ள காணொலியில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்

"பொதுவாகவே விரதம் என்றால் நீங்கள் எல்லா விரதங்களையும் இந்த வரையறைக்குள் கொண்டு வந்து விடலாம். பௌர்ணமி, அமாவாசை, சஷ்டி விரதம் என எந்த விரதமாக இருந்தாலும் அது விரதம். அந்த விரதத்தை நாம் எப்படி இருக்க வேண்டும். விரதம் நாம் ஏன் இருக்க வேண்டும் என்பதை முதலில் பார்க்கலாம்.

எந்தக் கடவுளும் நமது உடலை வருத்தி கஷ்டப்பட்டு கொண்டு விரதம் இருந்து என்னை வந்து சேரு என்று சொன்னாரா என்றால் கிடையாது. ஆனால் நாம் இந்த விரதத்தை...