இந்தியா, ஜனவரி 27 -- Astro Tips : நம்மில் பலரும் வீட்டில் அல்லது கோயில்களுக்கு சென்று விளக்கு ஏற்றி வழி படுகிறோம். நெய் விளக்கு , எண்ணெய் விளக்கு, எலுமிச்சை விளக்கு என பல வகைகளில் விளக்கு ஏற்றி வழி படுகின்றனர். அதில் குறிப்பாக மாவிளக்கு வழிபாடு மிகவும் முக்கியமான ஒன்று. இறைவன் சன்னதியில் ஏற்றப்படும் பல தீபங்களில் மாவிளக்கும் முக்கியமான ஒன்று ஆகும். இந்த வழிபாடு நம் முன்னோர்கள் வழி வழியாக செய்து வந்தனர்.

மாவிளக்கு பெரும்பாலும் அம்மாளுக்கு செய்யப்படும் மிக முக்கிய வழிபாடுகளில் ஒன்று. அது மட்டும் இல்லாமல் நம் வீட்டில் நடக்கும் திருமணம், சீமந்தம், புது மனை புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு முன் குல தெய்வத்திற்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறோம். இப்படி செய்வதால் நாம் எடுத்த காரியம் தடைகள் இன்றி நடை பெறும் என்பது ஐதீகம். பலர் தங்களுக்கு ச...