இந்தியா, பிப்ரவரி 7 -- பொதுவாக நாம் கோயிலில் இறைவனை வணங்கச் செல்லும் போது நாம் நமது வேண்டுதலை எந்த இடத்தில் நின்று முன்வைக்க வேண்டும் என்று நீங்கள் யோசித்தது. உண்டா.. இது குறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தனது ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியிட்டுள்ள காணொளியில் அவர் கூறிய தகவல்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.

கோயில்களில் நேராக உள்ளே செல்லும்போது, ஒரு சிவன் கோயில் என்றால் ஒரு விநாயகர் சன்னதி இருக்கும். பிறகு முருகன், அம்பாள், சிவன் என்று ஒவ்வொரு சன்னதியாக இருக்கும். இப்படி ஒவ்வொரு சன்னதியிலும் சிலர் தங்களது வேண்டுதலை முன்வைப்பார்கள். சிலர் எதுவுமே வேண்டாமல் கும்பிடுவார்கள். இது அவர்களின் பக்குவப்பட்ட மனதில் வெளிப்பாடு. ஆனால் நாம் வேண்டுதலை கேட்பதில் ஒன்ற...