இந்தியா, பிப்ரவரி 3 -- கோவில் அல்லது வீடுகளில் நாம் இறைவனை வணங்கும்போது நமது கண்களில் கண்ணீர் வருவதற்கு காரணம் என்ன என்று நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா.. இது குறித்து ஆத்ம ஞான மையம் youtube சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி விரைவான விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து இங்கு பார்க்கலாம். இந்த வீடியோ கடந்த டிசம்பர் 27ஆம் தேதி ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது.

அதில் "இந்த உலகில் நமக்கு துன்பம் வரும்போது கண்களில் இருந்து கண்ணீர் வருவது இயற்கையான ஒன்று. ஆனால் சில நேரங்களில் அதீத சந்தோஷத்திலும் கண்களில் இருந்து கண்ணீர் வரும் என்பதும் இயற்கையான ஒன்றுதான். இந்த ஆனந்தத்திலேயேயும், துன்பத்திலேயும் வருகின்ற தண்ணீரைத் தாண்டி இறைவனின் சன்னதி முன்பாக நாம் நிற்கும்போது காரணமே தெரியாமல் சிலருக்கு கண்ணீர் வருகிறது. அதற்கு எ...