இந்தியா, ஏப்ரல் 12 -- Lord Sun: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசி அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.

சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது சூரியன் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினம் சித்திரை தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது.

சூரியன் அதே நாளில் அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்கின்றார். சூரியன் ஒரே நாளில் ராசி ம...