இந்தியா, மார்ச் 31 -- இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, 'ஓ மை கடவுளே' படத்துக்குப் பின், 'டிராகன்' என்னும் படத்தை இயக்கினார். இந்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குறிப்பாக இந்தப்படத்தில் இயக்குநர் அஸ்வத்தின் எழுத்து பலராலும் பாராட்டப்பட்டது.

இப்போது இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பை அவர் கொடுத்திருக்கிறார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'சிம்புவின் 51 வது படம் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 27 வது படம் ஆகியவற்றில் பணியாற்ற உதவி இயக்குநர்...