இந்தியா, பிப்ரவரி 9 -- தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் உருவாக இருக்கும் பெயரிடாத திரைப்படம் '#AS23 இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் கதையை 'போர் தொழில்' எனும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற திரைப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார்.

மேலும் படிக்க: Ashok Selvan: பொன்னுங்க சைட் அடிக்குற விதமே தப்பு.. அசோக் செல்வன் என்ன சொல்றாரு?

இந்த படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்க...