இந்தியா, பிப்ரவரி 8 -- யாமி கவுதம் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பலேவின் ஆர்டிகிள் 370 படத்தின் டிரெய்லர் இன்று (பிப்ரவரி 8) வெளியிடப்பட்டது.

மேலும் இப்படமானது காஷ்மீர் முழுக்க இந்தியாவுக்குச் சொந்தம் என்று கூறும் வகையிலும், ஆர்ட்டிக்கிள் 370 என்னும் அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புப் பிரிவை நீக்கும்போது நடந்த பிரச்னைகள் குறித்தும் பேசவுள்ளது.

இந்தப் படமானது வரும் பிப்ரவரி 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவித்துள்ளனர்.

இரண்டு நிமிடங்கள் 40 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லரில், காஷ்மீரின் 'லாஸ்ட் கேஸ்' என்று அழைக்கும் யாமி, காஷ்மீரின் 370 ஆர்ட்டிக்கிளின்போது, புலனாய்வு அதிகாரியாக தனது வேலையை செய்ய கடினமாக உள்ளது என்று விரக்தியடைகிறார். ஜம்மு காஷ்மீர் பிர...