மதுரை,அரிட்டாபட்டி,Arittapatti, ஜனவரி 26 -- சட்டமன்ற தேர்தலில் உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கு ஆதரவு தாருங்கள். எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன் என அரிட்டாப்பட்டி மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

''அரிட்டாப்பட்டி பகுதியை சுற்றியிருக்கக்கூடிய மக்கள், அந்தப் பகுதியில் உள்ள பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நேற்றைக்கு வந்து என்னை கோட்டையில் பார்த்தார்கள். டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் முழுமையாக இரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டதற்கு எப்படிப்பட்ட அழுத்தத்தை இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள் தந்தார்கள் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

அதை உணர்ந்து உங்களால் உருவாக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சி, அதாவது உங்களுடைய நம்பிக்கை பெற்றிருக்கக்கூடிய உங்க...