இந்தியா, பிப்ரவரி 10 -- Aranthangi Nisha: 'கலக்கப்போவது யார்' என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்தவர் அறந்தாங்கி நிஷா. இவரது காமெடியான பேச்சு மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதனைதொடர்ந்து பொதுமேடைகள் பலவற்றில் தோன்ற ஆரம்பித்த இவர் விஜய் டிவின் ராமர் வீடு, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

அதனை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கால்பதித்த அறந்தாங்கி நிஷா, மாரி 2, திருச்சிற்றம்பலம், ஜெயிலர், ராயன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். இதன் மூலம் அவருக்கு புகழோடு சேர்த்து வருமானமும் நன்றாக வந்தது. இந்த நிலையில், அறந்தாங்கி நிஷா தற்போது சென்னையில் வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.

அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம்...