இந்தியா, ஏப்ரல் 3 -- Araikasu Amman Kovil: நமது நாட்டில் பெண் தெய்வங்களுக்கு வழிபாடுகள் மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசை எல்லாம் பெண் தெய்வங்களுக்கு கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பிரகதாம்பாள் திருக்கோயில். இந்த அம்மனை அரைக்காசு அம்மன் என்று அழைக்கின்றனர்.

இந்த கோயிலில் மூலவராக கோகணேஸ்வரர் என்ற திருநாமத்தில் சிவபெருமான் பெற்றிருக்கின்றார். கோயிலின் தலவிருட்சமாக மகிழ மரம் விளங்கி வருகிறது. தீர்த்தம் மங்கள தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கோகர்ணத்தில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. புதுக்கோட்...