இந்தியா, ஏப்ரல் 2 -- மேஷம், கடகம், கன்னி உள்ளிட்ட சில ராசியினருக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு இம்மாதம் நேர்மறையான எண்ணங்கள் மேம்படும். மேஷத்தில் ஏப்ரல் 14 அன்று சூரியன் உச்சம் அடைகிறார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. குருவால் பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆதாயமான பலன்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். சுபச் செலவுகள் ஏற்படும்.

சுக்கிரன், புதன் சேரும் மாதம். இதனால் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சி நடக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி உண்டு. நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். திடீர் அதி...