இந்தியா, பிப்ரவரி 8 -- ஆப்பிள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதனால்தான் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறப்படுகிறது. நீங்கள் அதை எப்படி சாப்பிட்டாலும், ஆப்பிள் உங்களுக்கு நல்லது. ஆனால் அதில் உள்ள விதைகளை சாப்பிடவே கூடாது. ஆப்பிளை அப்படியே சாப்பிடலாம். சாலட்களாக நறுக்கி அல்லது ஜூஸாக அருந்துவது நல்லது. இது ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இங்கு ஆப்பிள் டீ எப்படி செய்வது என பார்க்கலாம். ஆப்பிள் டீ செய்வது எளிது.

ஆப்பிள் டீ தயாரிக்க உங்களுக்கு தேவையானது

ஆப்பிள் - 1

தண்ணீர் - 3 கப்

எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி

தேநீர் பைகள் - 2

இலவங்கப்பட்டை அல்லது கிராம்பு தூள்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து டீ பேக்குகளை தண்ணீரில் ம...