சென்னை,டெல்லி,மும்பை, ஏப்ரல் 7 -- சுகாதாரச் செலவுகள் உயர்ந்து வருவதாகவும். வேகமாக வளர்ந்து வரும் மருத்துவச் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியிருப்பதாக Aon நிறுவனத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | Stock Market Crash: பங்குச்சந்தையில் 10 வினாடிகளில் ரூ.20 லட்சம் கோடி இழப்பு: காரணம் என்ன?

Aon நிறுவனத்தின் உலகளாவிய மருத்துவச் செலவு போக்கு அறிக்கை 2025(Aon's Global Medical Trend Rates Report 2025), மருத்துவத் திட்டச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய மருத்துவச் செலவு போக்கு 10.0 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2024 இல் 10.1 சதவீதத்திலிருந்து சிறிது குறைவு என்றாலும், இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க உயர்வாகும். இது உலகளவில் சுகாதாரச் செலவுக...