இந்தியா, பிப்ரவரி 1 -- Anuradha Sriram: பாடகி அனுராதா ஸ்ரீராம் என்ற பெயரை தமிழ் சினிமா ரசிகர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்வர். ஏனென்றால் அவரது தனித்த குரலும் துள்ளலான உச்சரிப்பும் கேக்கும் செவிகளை என்றும் குஷிப்படுத்த தவறியதே இல்லை, அவரது இளமையான குரலுக்கும் உற்சாகத்திற்கும் காரணம் தன் குடும்பம் தான் என அனுராதா ஸ்ரீராம் சில நாட்களுக்கு முன் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பார்.

என் அம்மா தான் ஜேசுதாஸுக்கு தமிழ் கத்துக் கொடுத்தாங்க. எங்க அம்மா ட்ரூப்ல தான் ஆன்மீக பாடல் பாடும் வீரமணி எல்லாம் பாடுனாங்க. இளையராஜா சார் கூட எங்க அம்மாக்கு மியூசிக் போட்டுருக்காரு.

நான் பொறந்தப்போ எங்க அம்மா அதிகமா பாடல. எங்க அம்மாவோட ஜீன்னு நெனக்குறேன். நான் இப்படி பாடுறது. எங்க அம்மா சொல்லுவாங்க நான் பேசுறதுக்கு முன்னாடியே பாடுனேன்...