இந்தியா, ஜனவரி 31 -- Antony: சோசியல் மீடியாவில் இருக்கிறது பெரிய அடிக்சன்.. நடிகர் ஆனால் அவ்வளவு போராட்டம் இருக்கும் என மேற்குத்தொடர்ச்சி மலை, ரைட்டர், மெய்யழகன், பாட்டில் ராதா படத்தில் நடிகர் நடிகர் ஆண்டனி கூறியிருக்கிறார்.

பாட்டில் ராதா படத்தில் நடித்த மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படப் புகழ், நடிகர் ஆண்டனி விசில் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியவதாவது, '' பாட்டில் ராதா படத்தில் நான் நடித்ததைக் கூப்பிட்டு வாழ்த்துறது மகிழ்ச்சியாக இருக்கு. முன்பே நீலம் புரொடக்‌ஷனில் நான் ரைட்டர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சிருந்தேன்.

அடுத்து மீண்டும், பாட்டில் ராதா படத்துக்கு நடிக்க கூப்பிட்டபோது, குடிக்கும் நபரின் தம்பியாக நடித்தேன். நாம் நிறைய ரோட்டில் போகும்போது, நான் நடிச்ச கேரக்டர் மாதிரி ஒரு கேரக்டரைப் பார்த்திருக்கேன்....