இந்தியா, பிப்ரவரி 4 -- உங்கள் இதய ஆரோக்கியம் என்பது முழு உடல் ஆரோக்கியம் ஆகும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் என்பவை, உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்தும், வீக்கத்தில் இருந்தும் பாதுகாக்க முக்கியமானது. இவை இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் உங்கள் உடலில் செல்களை சேதப்படுத்தும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தான் உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்கும் என்று கூறப்படுகிறது. அது இந்த 7 உணவுகளில் அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது.

பச்சை கீரைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் உள்ள ஃப்ளாவனாய்ட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இதயத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஸ்டராபெரிகள், ப்ளூபெரிகள் மற்றும் ராஷ்பெரி...