இந்தியா, மார்ச் 30 -- தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொடக்ககல்வி பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இதனால் வரும் ஏப்ரல் 7 முதல் 17 வரை இறுதித் தேர்வுகள் நடைபெறும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக, ஏப்ரல் 9 முதல் 21 வரை இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தீவிரம் காரணமாக தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:- Rain Alert: '5 மாவட்டங்களில் க...