இந்தியா, பிப்ரவரி 18 -- Annapoorani Arasu Amma: கடந்த 2020 ஆம் ஆண்டு ஜிதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சொல்வதெல்லாம் உண்மை' என்கிற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் அன்னபூரணி அரசு அம்மா. தற்போது திருவண்ணாமலை அருகே ஆசிரமத்தை அமைத்து தன்னுடைய பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். அன்னபூரணி அம்மா பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அன்னபூரணி. அந்த வீடியோவில், தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்கு அனுப்ப சூழ்ச்சி நடந்து வருவதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

அன்னபூரணி அரசு அம்மா பேசும் வீடியோவில், "நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நல்ல சக்தி வரும் போது, அதை எதிர்ப்பதற்காக கூடவே தீய சக்தியும் வரும். இறுதியில் நல்ல சக்தி தான் வெற்றி பெற...