இந்தியா, மார்ச் 23 -- ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அதுதான் தேர்தல் காலம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் நகர திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்தார்.

நோன்பு திறப்பு நிகழ்வில் பேசிய அவர், "அன்போடு சுவையான பிரியாணி கொடுத்தால் அது திருமண காலம்; கஞ்சியும் வடையும் கொடுத்தால் அது ரமலான் நோன்புக்காலம். ஆயிரக்கணக்கான ஆடுகளை குர்பானி பக்ரீத் காலம். பள்ளப்பட்டி ஊரார் அனைவரும் ஒரே ஆட்டை கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்" எனவே ஒரு ஆடு அல்ல, எத்தனை ஆடு வந்தாலும் இங்கே உள்ளேயும் வர முடியாது. உள்ளே வந்தால் வெளியேயும் போக முடியாது என்பதை கடந்த தேர்தலில் நிரூபித்துக் காட்டி உள்...