இந்தியா, மார்ச் 24 -- அமைச்சர் சேகர்பாபு ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில், "அண்ணாமலை ஒரு டூப் போலீஸ்" என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்து உள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுகவில் படித்தவர்கள் அதிகாரத்துக்கு வரவில்லை என்றும், குற்றப்பின்னணி உள்ள அமைச்சர்கள் கல்விக் கொள்கையைப் பற்றி பேசுவது எப்படி என்றும் திருச்சியில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கூறியதற்கு பதிலடியாக, "படிப்பிற்கும் மனிதாபிமானத்திற்கும் சம்பந்தமில்லை" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்ன...